சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்டிஏடி நீச்சல் வளாகத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 250 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை அடிப்படையாக வைத்து தான் அசாமில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வீரர் தனுஷ் 50 மீட்டர் பிரஷ்டிரோக் பிரிவில் 29.23 புதிய சாதனை படைத்துள்ளார். இதேபோன்று 200 மீட்டர் தூரத்திலும் 21.60 நிமிடங்களில் கடந்து தனுஷ் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சலில் 59.93 வினாடியில் கடந்து ஆதித்யா புதிய சாதனை படைத்துள்ளார். அதன் பிறகு 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் 25.47 வினாடியில் கடந்து பெனெட்டிகன் ரோகித் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் 200 மீட்டர் பிரிவில் மதுமிதா, நிதிக் ஆகியோர் முதல் இடத்தையும், 50 மீட்டர் பிரிவில் ஸ்ரீயா ஈஸ்வர் முதல் இடத்தையும், 200 மீட்டர் பிரிவில் பெனெட்டிகன் ரோகித் முதலிடத்தையும், 400 மீட்டர் பிரிவில் சத்ய சாய் கிருஷ்ணன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.