தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் மேல்நிலை பள்ளியில் கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சுரண்டை ஸ்ரீ ஜெயந்திரா பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
இதன் மூலம் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஸ்ரீஜெயந்திரா பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.