போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியில் மாவட்ட அளவிலான வளையபந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறுமளஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் இளையோர் ஆண்கள் பிரிவில் மகேஷ், விஜயராஜா, மூத்தோர் பெண்கள் பிரிவில் கீர்த்திகா, நந்திதா ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
இந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்கள் வசந்த், சச்சின், தர்ஷினி தேவி, தீபிகா ஆகியோர் 2- ஆம் இடத்தையும், தனுசியா, மகேஷ் ஆகியோர் 3- ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செலின் கமலம், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.