Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான மல்யுத்த போட்டி” வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மாநில மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற போட்டியில் 39 கிலோ எடை பிரிவில் நித்திஷ்வரியும், 54 கிலோ எடை பிரிவில் நாகவல்லி மற்றும்  66 கிலோ எடை பிரிவில் சங்கீதா ஆகியோர் வெள்ளி பதக்கம்  பெற்றனர்.

அதன்பின்னர்  நடைபெற்ற 52 கிலோ எடைப்பிரிவில் தரணிநாதன்,  38 கிலோ எடை பிரிவில் ஹரிஹரன், 48 கிலோ எடை பிரிவில் சபா மற்றும்  57 கிலோ எடை பிரிவில் பேரரசு ஆகியோர் வெண்கல  பதக்கம் வென்றுள்ளனர். இதனையடுத்து வெற்றிபெற்ற அனைவரையும் பயிற்சியாளர் அசாருதீன் பாராட்டியுள்ளார். இதில் வெற்றி 15 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,

Categories

Tech |