தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு உள்அரங்கில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். அதன் பிறகு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆண்களுக்கு கிரோகோ ரோமன் மல்யுத்த போட்டிகளும், பெண்களுக்கு பிரீ ஸ்டைல் மல்யுத்த போட்டிகளும் நடக்கிறது. பதக்கம்-சான்றிதழ் இதில் ஆண்களுக்கு 55, 60, 63, 67, 72, 77, 82, 87, 97, 130 கிலோ எடை பிரிவிலும், பெண்களுக்கு 53, 57, 62, 68, 76 கிலோ எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இந்த போட்டியில் ஈரோடு சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர், கோவை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 140 மல்யுத்த வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இன்று ஆண்களுக்கு 57, 61, 65, 70, 74, 79, 86, 92, 97, 125 கிலோ எடை பிரிவில் கிரோகோ ரோமன் மல்யுத்த போட்டிகளும், பெண்களுக்கு 50, 55, 59, 62, 72 கிலோ எடை பிரிவில் பிரீ ஸ்டைல் மல்யுத்த போட்டிகளும் நடக்கிறது. வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் வீரர் -வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதில் ஒருவர் தமிழ்நாடு மல்யுத்த அணிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் வருகின்ற 1-ந்தேதி கேரளா மாநிலத்தில் தொடங்கும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.