விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழக மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான யூத் கைப்பந்து போட்டிகள் கடந்த ஆறாம் தேதி மாலை தொடங்கியுள்ளது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்து 420 ஆண்கள் மற்றும் 26 அணைகளை சேர்ந்த 312 பெண்கள் என மொத்தம் 232 பேர் கலந்து கொண்டு ள்ளனர். காமராஜர் நகரில் உள்ள ஊர்க்காவல் படை மைதானம் மற்றும் தனியார் பள்ளி மைதானத்தில் உள்ள ஐந்து ஆட்ட கழகங்களில் நான்கு நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளது.
லீக் முறையில் வருடத்திற்கு அறுவது போட்டிகளும் பெண்களுக்கு 34 போட்டிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 16 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரை இறுதிப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கோவை அணியினர் சேலம் அணியினரை 3-0 என்னும் புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில் சென்னை அணியினர் 3-0 என்ற புள்ளி கணக்கில் கிருஷ்ணகிரி அணியினரையும் சேலம் அணியினர் 3-1 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணியினரையும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மின்னொளி மைதானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு முதலில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சென்னை அணியினர் 3-0 என்ற நேர் செட் கணக்கில் சேலம் அணியினரை வென்று முதலிடம் பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை சேலம் அணியினரும், மூன்றாவது இடத்தை கிருஷ்ணகிரியும், நான்காவது இடத்தை மதுரை அணியினரும் பிடித்துள்ளனர். இரண்டாவதாக நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் கோவை அணியினர் 3-1 என்ற கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியினரை தோற்கடித்துள்ளனர். சேலம் அணியினர் மூன்றாவது இடத்தையும், தூத்துக்குடி அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். இறுதி போட்டியில் நான்கு இடங்களை பிடித்த அணியினருக்கு நிரந்தர கோப்பை உடன் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து பாராட்டி உள்ளார்.