மதுரை ரிசர்வ் ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி, சென்னை அணி, ஜி.எஸ்.டி. மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் அணி, சென்னை அணி, போஸ்டல் ஆக்கி கிளப் சென்னை அணி, மதுரை ரிசர்வ் லையன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஊட்டி எம்.ஆர்.சி. வெலிங்டன் அணி, தென் மண்டல காவல்துறை மதுரை அணி, சென்னை சிட்டி போலீஸ் அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை அணி, திருநகர் ஆக்கி கிளப் மதுரை அணி, தென்னக ரயில்வே சென்னை அணி, சோழா திருச்சி அணி, மதுரை வாடிப்பட்டிஆ க்கி அணி, சென்னை வருமானவரித்துறை, தமிழ்நாடு காவல்துறை சென்னை அணி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற அறை இறுதி போட்டியில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதியது. இதில் 5-2 என்ற கோல் கணக்கில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் அனி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதன் பிறகு இரண்டாவது இறுதிப் போட்டியில் சென்னை வருமானவரித்துறயும் சென்னை இந்தியன் வங்கி அணியும் விளையாடியது. இந்த போட்டியில் 7-6 என்ற கோல் கணக்கில் சென்னை வருமானவரித்துறை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 3,4 இடத்திற்கான போட்டிகள் மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் போட்டிக்கான ஏற்பாடுகளை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கண்ணன் உள்ளிட்ட பலர் செய்துள்ளனர்.