மாநில அளவிலான செஸ் போட்டியில் 2-வது இடம் பிடித்து மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரும்புகோட்டை எஸ். பி .கே. பள்ளியில் அபிரகாம் ஐன்ஸ்டின் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த மாணவனை பாராட்டும் விதமாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணசாமி, பள்ளி செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெய்கணேஷ், தலைமையாசிரியர் ஆனந்தராஜன், உடற்கல்வி ஆசிரியர் சவுந்தரியபாண்டியன் உள்ளிட்ட பலர் மாணவனை சந்தித்து பாராட்டியுள்ளனர். அதன்பின்னர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் மாணவனுக்கு உதவி தொகை மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளார்.