திருச்சி மாநகர கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கிச் சூடுகளில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதிக்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர், செந்தூர் செல்வன் பொருளாளர் சிராஜூதன் போன்றோர் கலந்து கொண்டு உரையாடினர். அதன் பின் தேசிய ரைபிள் சங்க கௌரவ செயலாளர் ரவி கிருஷ்ணன் தொடக்க உரையாற்றியுள்ளார். தமிழ்நாடு துப்பாக்கி சூடும் சங்க செயலாளர் வேல்சங்கர் போட்டிகளைப் பற்றி விளக்கம் தெரிவித்துள்ளார். இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவினருக்கும், 25 முதல் 45 வயது வரை, 45 முதல் 60 மற்றும் 60க்கும் மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றுள்ளது.
மேலும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியாளர்களுக்கு வருகின்ற 28-ம் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெறுபவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. 19 தேதி முதல் 31ஆம் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றது. மேலும் இதில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். முன்னதாக துப்பாக்கி சூடும் பயிற்சி தளத்தில் கலெக்டர் கமிஷனர் போன்றோர் துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை பார்த்துள்ளனர்.