திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, சேலம், புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டி வயது மற்றும் எடை அடிப்படையில் தனி தனியாக நடைபெற்றது. இதனையடுத்து இந்த போட்டியில் போட்டியில் பழனி பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
அதன்படி 46 கிலோ எடை பிரிவில் அன்பு கார்த்தி 2 வது இடம் பிடித்தார். 70 கிலோ எடை பிரிவில் வேதாவும், 60 கிலோ இடைப்பிடிவில் மதுமிதாவும் 3 ஆம் இடம் பிடித்தனர். அதனை தொடர்ந்து 15 வயது உட்பட்டவர்களுக்கான 45 கிலோ எடை பிரிவில் மிதுன் கிஷோரும், 33 கிலோ எடை பிரிவில் தனுஷ் குமாரும் 3 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் இவர்களை பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் பாராட்டினர்.