மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க மாநில கல்விக் கொள்கை குழு முடிவு எடுத்துள்ளது.
தமிழகத்திற்கு என பிரத்தியேகமாக கல்வி குழுவை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரண்டு கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கு பொதுமக்கள் அனைவரிடமும் கருத்துக்களை பெற இந்த குழு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து தமிழகம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி அதன் மூலமாக கல்விக் கொள்கையை வரையறுக்க ஆலோசனை நடைபெற உள்ளது .
ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், இதற்கான முகவரி விரைவில் வெளியிடப்படும் எனவும் கல்விக் கொள்கை குழு தகவல் அளித்துள்ளது. இதன்படி மாநில கல்விக் கொள்கை குழுவின் அடுத்த கட்ட கூட்டம் ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளது.