Categories
உலக செய்திகள்

மாநில சட்டசபை கூட்டம்…. துணை ஜனாதிபதி வருகை…. எதிர்ப்பு தெரிவித்த சீனா….!!

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 3,488 கிமீ எல்லையின் பல பகுதிகளை  சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தையும், தெற்கு திபெத்தையும் உரிமை கோருகிறது.  இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ம் தேதி நடைபெற்ற அருணாச்சல பிரதேச மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று பேட்டியளித்தபோது, “‘அருணாசல பிரதேசத்துக்கு எந்த இந்திய தலைவர் வருகை புரிவதை எங்களால் ஏற்க இயலாது. இந்நிலையில் சீனாவானது இந்த மாநிலத்திற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. மேலும் சீனா எல்லை சம்பந்தமான நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக உள்ளது. இதனையடுத்து சீன அரசானது, இந்திய அரசு தங்களுக்கு சாதகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் உருவாக்கப்பட்ட  அருணாசல பிரதேசத்தை ஒருபோதும்  அங்கீகரிக்கவில்லை. மேலும், இப்பகுதிக்கு இந்தியத் தலைவர்கள் வருகை தருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |