Categories
தேசிய செய்திகள்

மாநில முழுவதும் இருளில் தவிப்பு…. ஊழியர்களின் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரிகளும், ஊழியர்களும் பிப்..2 (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதல் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியிலுள்ள தென்றல் வீதி , குறிஞ்சி வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட வீதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டது.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மினி பேருந்தை சிறைபிடித்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்தடை உடனே சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக மின்துறை தலைமை அலுவலகம் அருகில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் அசம்பாவிதங்களை தடுக்கும் அடிப்படையில் நேற்று இரவு முதல் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

எனினும் மின் துறை ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இவர்களின் போராட்டத்திற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மின்துறையை சேர்ந்த ஊழியர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்…

Categories

Tech |