தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மு.கருணாநிதி அவர்களால் கடந்த 1971 ஆம் வருடம் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இது முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கு செயல்பாடுகளில் பரிந்துரைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குழு 23.04.2020 அன்று மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியம்மித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.