Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மானாமதுரை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு”… கோட்டு ஓவியத்தை தொட்டிகல் முனி என வணங்கி வரும் மக்கள்…!!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை அருகே கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் கூடிய ஒரு கல் கிடைத்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமயகுமார் என்பவர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த கல் 300 வருடங்களுக்கு முற்பட்டது என தெரியவந்தது.

மேலும் அந்தக் கல் மூன்றடி உயரம் உள்ளது. கல்லின் மேற்பகுதியில் திருமாலின் வாமன அவதார குறியீடுகளான குடை, கமண்டலம், சங்கு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றது. அதில் சந்திரனின் பிறை வடிவம் மற்றும் சூரியன் வரையப்பட்டிருக்கிறது. கல்லின் கீழ்பகுதியில் தமிழ் எழுத்துக்கள் ஆறு வரிகளுக்கு பொறிக்கப்பட்டிருக்கின்றது. முதல் வரியில் அழகர்சாமி எனவும் மூன்றாவது வரியில் வாணாதிராயன் எனவும் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இதில் வாணாதிராயன் என்பவர் குறுநில மன்னர் ஆவார். இவர் மானாமதுரை பகுதியை ஆட்சி செய்தார். மன்னரின் ஆணைப்படி அழகர்சாமி என்பவர் அந்த பகுதியில் இருந்த திருமால் கோவிலுக்கு நிலங்களை தானமாக தந்ததை இந்த கல்வெட்டில் பதிவு செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும் இந்தக் கல்லை கல்வெட்டாக மட்டுமல்லாமல் எல்லைக் கல்லாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது. இந்த  கோட்டு ஓவியத்தை அப்பகுதி மக்கள் தொட்டிக்கல் முனி என வணங்கி வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |