Categories
அரசியல் சிவகங்கை மாவட்ட செய்திகள்

மானாமதுரை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழரின் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றி கொண்டிருக்கும் கீழடியை உள்ளடக்கியது மானாமதுரை சட்ட மன்ற தொகுதி. கலிமண் பொம்மைகள், கடம் இசைக்கருவி  உள்ளிட்டவை இந்த தொகுதியின் சிறப்பு அம்சங்களாகும். சுதந்திரத்திற்கு பின்னர் 1952 லிருந்து 15 சட்ட மன்ற தேர்தல் மற்றும் 1 இடை தேர்தலை மானாமதுரை எதிர் கொண்டுள்ளது. 1977லிருந்து தற்போது வரை மானாமதுரை தனித்தொகுதியாக உள்ளது.

இந்த தொகுதியில் 6 முறை அதிமுகவும், 3 முறை  பெற்றுள்ளன. திமுக, சுதந்திரா காட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன.இந்திய கம்யூனிஸ்ட் ,தமிழ் மாநில காங்கிரஸ், சுயேட்சை தலா 1 முறை வென்றுள்ளனர். 18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கத்தை அடுத்து 2019ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி நெட்டூர்  நாகராஜன் தற்போதைய எம்.எல்.ஏ வாக உள்ளார். சிவகங்கையின் மற்ற தொகுதிகளை போலவே மானாமதுரையும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

தென்னை, வாழை ,கரும்பு, நெல் சாகுபடி இப்பகுதியின் பிரதான தொழிலாகும். சிப்கோ, சிப்காட் என  2 தொழில்பேட்டைகள் இருந்தாலும் அங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் தரைப்பலன்களை கட்டப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. நாட்டார் கால்வாய் வெட்ட பட்டு 20 ஆண்டுகளாகியும் தண்ணீர் வருமா என்பது கானல் நீராகவே உள்ளது.

வைகை ஆற்று படுகையிலுள்ள திருபுவனத்தில் பெரும்பாலான ஊர்களில் தண்ணீர் பிரச்னை நீடிக்கிறது. புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரையில் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. 2011 மானாமதுரை தொகுதியுடன் சேர்த்து இளையான் குடியில் குண்டு மிளகாய் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தம்மால் முடிந்த திட்டங்களை மானாமதுரை தொகுதிக்கு செய்து கொடுத்துள்ளதாக எம்.எல்.ஏ நெட்டூர் நாகராஜன் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு உளர் பழம், புதிய பேருந்து நிலையம் மானாமதுரை மக்களின் கோரிக்கை பட்டியலில் உள்ளன. வேலைவாய்ப்புகளை பெருக்க தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இலவச மின் இணைப்பு, சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை ஆகும். திருபுவனத்தில் அரசு மகளிர் காலை அறிவியல் கல்லூரி கட்ட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

Categories

Tech |