Categories
உலக செய்திகள்

“மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கபோறேன்”…. எலான் மஸ்க் அறிவிப்பு….!!!!

உலக பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான்மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை அண்மையில் கைவிட்டார். டுவிட்டரிலுள்ள போலிகணக்கு விபரங்கள் பற்றிய தரவுகள் இல்லை எனக்கூறி இந்த ஒப்பந்தத்தை மஸ்க் கைவிட்டார். அவ்வாறு டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான்மஸ்க் கைவிட்ட சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் எலான்மஸ்க் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “தெளிவாகச் சொல்வதானால் நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன். இந்த பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில்  நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன்” என அறிவித்துள்ளார். இப்பதிவு பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது. மான்செஸ்டர் யுனைடெட் உலகின் தலை சிறந்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றாகும். இந்த அணியில் கால்பந்து நட்சத்திரவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |