கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குள்ளட்டி வனப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ஹோட்டலில் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிசலூரை சேர்ந்த மல்லேசன், மாதேஷ் ஆகியோர் ஹோட்டலில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி ஓசூர் வனகோட்டை வனக்காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது பிரசாந்த், மல்லேசன், மாதேஷ் ஆகிய 3 பேரும் இணைந்து மான்களை வேட்டையாடி ஹோட்டலில் சமைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. வனத்துறையினர் வருவதை பார்த்ததும் 3 பேரும் இறைச்சியை குழி தோண்டி புதைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்து தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.