தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டில் மான் கறி சமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மான் கறி சமைக்கபடுவதாக கம்பம் மேற்கு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கம்பம் மேற்கு வனத்துறை ரேச்சர் அன்பு தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டர். சோதனையின் போது கூடலூரில் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் மான் கறி சமைத்துக் கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சமைத்துக் கொண்டிருந்த மான்கரிவுடன் முருகனை கைது செய்த வனத்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் கூடலூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் மான் இறந்து கிடந்ததாகவும் இறந்து மான்கரியை சாப்பிடுவதற்காக சமையல் செய்ததாகவும் தெரியவந்தது.
தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி மான்கரியை வைத்திருந்த குற்றத்திற்காக முருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ள்ளது.