நாளை நடைபெறவுள்ள மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்டம் முழுவதிலும் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 50% மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனையடுத்து அவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செளுத்திகொள்ளதவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும் கொரோன்ன தடுப்பூசி செலுத்தி கொள்வதால் கொரோனா இறப்பு 97% ஏற்படாது என்றும் 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவும், இதனால் எவ்வித பத்தியத்தையும் பின்பற்ற தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர். ஆகவே கொரோனாவில் இருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள அரசு வழிகாட்டுதலின் படி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.