Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாபெரும் தடுப்பூசி முகாம்… தானாக முன்வந்து செலுத்திகொள்ள வேண்டும்.. ஆட்சியரின் வேண்டுகோள்…!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் தானாக முன்வந்து செலுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுகொள்ளாத பொதுமக்கள் தானாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை மாவட்டத்தில் 8,27,398 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும் இந்த முகாமை பயன்படுத்தி வேண்டும். மேலும் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 80,000 கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது எனவும், கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது என்றும் மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் கூறியுள்ளார்.

 

Categories

Tech |