Categories
மாநில செய்திகள்

மாபெரும் தோல்வியை சந்திக்க போகும் திமுக….. அடித்த சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்…..!!!

மதுரை பழங்காநாத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் அளவில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மேயர் நிதி அமைச்சரின் நிழலாக செயல்படுகிறார். மாநகராட்சியில் எந்த ஒரு பணியையும் செயல்படுத்தப்படவில்லை. மாநகராட்சி இயங்குகிறதா என்பதை தெரியவில்லை. செயல்படாத அரசாக உள்ள திமுக அரசு ஆளு கட்சியாக இருக்கும் போது ஒன்றும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றும் பேசி வருகிறது.

அதனைத் தொடர்ந்து உதயநிதி படம் வழங்காததால் பல படங்கள் முடங்கி கிடக்கிறது. முதல்வரின் மருமகன் சபரீசனின் கண்பார்வைக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இதனையடுத்து நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலை இல்லை. அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளனர். திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். முதல்வர் விளம்பர தேடாமல் மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை என்றவர், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மோசமான தோல்வியை சந்திக்கும். மேலும் அதிமுக ஆட்சி அமைக்க 2024 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |