Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. கலந்துகொண்ட பெண்கள்…. பணி நியமன ஆணையை வழங்கிய அதிகாரிகள்….!!

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கும் பணி நியமன  ஆணையை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை ப்ளூ ஓசன் பர்சனல் அன்  அலாய்டு  சர்வீஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன், கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் ஜபருல்லாகான், கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட மேலாளர் சுந்தரமூர்த்தி, கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் ஜபருல்லா கான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நசீர் கான், அபுபக்கர் சித்திக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 155 பெண்களில் 115 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை அதிகாரிகள்  வழங்கி பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |