உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமண ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த போது மணமகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவர் தலையில் இருந்த விக் கலண்டர் கீழே விழுந்துவிட்டது. அதன் பிறகு தான் மாப்பிள்ளை தலை வழுக்கை என அனைவருக்கும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் உடனடியாக திருமணத்தை நிறுத்தும் படி கூறி விட்டார். தன்னால் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மணப்பெண் மறுத்ததால் திருமணம் பாதியில் நின்றது. இதையடுத்து மணமகன் மணப்பெண் நில்லாமல் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Categories