மாமனார் மீது கல்லால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தார்கள்.
குடும்பத்தை வழி நடத்த பொறுமை முதல் தேவையாகும். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் கருத்து சுதந்திரம் உள்ளவர்களாக வளர்க்கப்படும் குடும்பத்தினர் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து சென்றுவிடலாம். குடும்பத்தில் குற்றமோ, குறையோ எதுவாக இருந்தாலும் அதை பெரிது படுத்தாமல் இருந்து விட வேண்டும். அவ்வாறு அதை பெரிதுபடுத்தினால் சண்டையில் தான் முடியும். அவ்வாறு ஏற்படும் குடும்ப பிரச்சனையானது காவல் நிலையம் வரை அழைத்துச் சென்று விடும்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கஞ்சிராயப்பபாளையம் அருகே இருக்கும் பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரின் மகள் சுதா. இவர் சென்ற 13 வருடங்களுக்கு முன்பாக பெரியசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சுதா தனது குழந்தைகளுடன் திருப்பூர் சென்று கூலி வேலை செய்து வருகின்றார்.
இதனால் பெரியசாமி காவல் நிலையத்தில் தனது மனைவி மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை செய்வதற்காக பிச்சைக்காரன், அவரின் மனைவி மற்றும் சுதா, அவரின் குழந்தைகள் உள்ளிட்டோரை காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். இதனால் காவல் நிலையம் அருகே வந்து நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது பெரியசாமி தனது மாமனாரை கல்லால் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.