மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர் சந்தை அகதிகள் முகாமல் கூலித்தொழிலாளியான நந்தகோபால்(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் முகாமில் வசித்த நாகராஜ்(53) என்பவரது மகள் ரோஸ்மேரியை நந்தகோபால் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரோஸ்மேரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் நந்தகோபால் அங்கு சென்று தன்னுடன் வருமாறு தனது மனைவியை அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கடந்த 2016-ஆம் ஆண்டு நந்தகோபால் நாகராஜை கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நந்தகோபாலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி 1000 ரூபாய் அபராதமும், நந்தகோபாலுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.