நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் திரைப்படத்தின் மீதான விமர்சனங்களை பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் சென்னையிலுள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் காத்திருந்த போது பட முடிந்து வெளியே வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், நடிகை அதிதியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
‘விருமன்’ படம் பார்த்து விட்டு வெளியே வந்த காமெடி நடிகர் கூல் சுரேஷ், “இயக்குநர் மகளை பார்க்க தான் வந்தேன். மாமனார் சங்கர் சார் அதிதியை காதலிக்கிறேன். நீங்க பெரிய இடம். நான் ஏழை. திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷ்னர் அலுவலகம் செல்வேன்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.