முதியவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மருமகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரகாசபுரம் பகுதியில் அந்தோணி தாசன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அந்தோணி தாசன் தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு இந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தோணி தாசனின் 2-வது மருமகன் ஜூலியன் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மாமனாருடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் அந்தோணி தாசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து முதியவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜூலியனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஜூலியனுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.