மாமனிதன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் எந்த வேடத்தில் நடித்தாலும் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார். இந்நிலையில் தற்பொழுது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார்.
மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டீசர் சென்ற வருடமே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில பிரச்சனை காரணமாக படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்து ஜூன் 24ஆம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மற்றும் 400 திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படகுழு இன்று வெளியிட்டு இருக்கின்றது. இது தற்பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.