மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடி சூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 1,037 வது சதய விழா இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி முதல்வர் ஸ்டாரின் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை நவம்பர் மூன்றாம் நாள் வருடம் தோறும் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை இனி அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்துள்ளது. இதனை ஏற்று இந்த வருடம் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும் தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் மணி மண்ணடபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.