தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து மனிதன், சைக்கோ, கண்ணேகலைமானே போன்ற உதயநிதியின் தரமான படங்களின் வரிசையில் தற்போது நெஞ்சுக்கு நீதி படமும் இணைந்துள்ளது. மேலும் நடிகர், சட்டமன்ற உறுப்பினர் என பிசியான உதயநிதி தற்போது பல படங்களில் விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிட்டு வருகிறார். அதன்படி ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் போன்ற படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் படத்தை உதயநிதி வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு மூலம் முதல்முறை உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கிறார். இதுகுறித்து கூறிய உதயநிதி, வடிவேலுக்கு இப்படத்தில் வழக்கமான கதாபாத்திரமாக இருக்காது என்றார். மேலும் மாரி செல்வராஜின் படங்களில் வரும் கதாபாத்திரமாகவே வடிவிலும் கதாபாத்திரமும் சற்று வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமானதாக இருக்கும். இதுகுறித்து மாரி செல்வராஜ் ஆரம்பத்திலேயே வடிவேலுவிடம் சொல்லி அவருக்கு கதையும் கதாபாத்திரமும் பிடித்து போக வடிவேலு நடிக்க சம்மதித்துள்ளார் என்று உதயநிதி கூறினார்.