Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள்” கலந்து கொண்ட மருத்துவ குழுவினர்….!!!!

மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவ குழுவினர் சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கத்தில் அரசு மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு  சிகிச்சை பெற்று வரும்  மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை   காப்பகத்தின் சார்பில் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதைப்போல் நேற்று 80  மனநலம் பாதிக்கப்பட் ட  நோயாளிகளை பேருந்தில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா   அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில்  குழுவினர் புராதன சின்னங்கல்  உள்ளிட்ட இடங்களை  சுற்றி காட்டியுள்ளனர். இந்த சுற்றுலாவில் மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை  மீண்டும்  பேருந்தில் காப்பகத்திற்கு   அழைத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |