Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி… ஒரே நாளில் 20,000 பேர் வருகை… தொல்லியல் துறையினரின் தகவல்…!!!!!

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் நுழைவு கட்டணம் இல்லாமல்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை கோவிலுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பார்வையாளர்கள் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த கடற்கரை கோவிலின் அழகை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து  புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டு 8 மணிக்கு பிறகும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். ஆனால் பயணிகள் யாரும் கடற்கரை கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் இன்னும் கூடுதலாக இரவு 9 மணி வரை திறந்து வைத்திருக்கலாம் என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி விட்டு அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றதை காண முடிகிறது. இது பற்றி தொல்லியல் துறையினர் கூறியதாவது, நேற்று முன்தினம் பார்வையாளர் இலவச அனுமதியால் ஒரே நாளில் மட்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என மொத்தம் 20 ஆயிரம் பேர் மாமல்லபுரம் புரதான சின்னங்களை பார்த்து ரசித்ததாக சென்றதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |