Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில் உள்ள தெரு நாய்களுக்கு… தடுப்பூசி செலுத்திய இங்கிலாந்து நாட்டு பெண்…!!!

இங்கிலாந்து நாட்டுப் பெண் மாமல்லபுரத்தில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றார்.

இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் எலைன்(67). இவர் அந்த நாட்டில் லண்டன் நகரில் இருக்கின்ற கால்நடை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார். இவர் பத்து வருடங்களுக்கு முன் இந்தியா வந்தார். அதன் பின்னர் சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு வந்துள்ளார். இங்கு இருக்கின்ற மக்களின் அன்பு பாசத்தால் நெகிழ்ந்த அவர் மாமல்லபுரத்தில்  தங்கினார்.

அதன்பின்  அங்குள்ள தெரு நாய்களுக்கு சேவை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மாமல்லபுரத்தில் தெரு தெருவாக சென்று மூன்று வேளையும் நாய்களுக்கு உணவு கொடுத்தார். இவருக்கு உதவியாக சுவீஸ் நாட்டில் வசித்த கிரிஸ்டீனா(69), பிரான்ஸ் நாட்டில் வசித்த பாஸ்களா(60) ஆகியோர் உடன் இருந்தார்கள். இவர்களும் இணைந்து மாமல்லபுரத்தில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |