தமிழகத்தில் அரசு பொது பயன்பாட்டிற்காக கடந்த 1974ஆம் ஆண்டு மாமல்லபுரத்தின் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 5.29 எக்டேர் நிலத்தை கைப்பற்றியது. அதன்பிறகு அந்த நிலத்தில் 250 கோடி செலவில் உலகத்தரத்தில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக இந்தத் நிதி திட்டத்தை செயல்படுத்தாதலால் உரிமையாளர்கள் நிலத்தை திருப்பி தர உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு நிலத்தை அரசு எடுத்துக் கொண்டது. எனவே அதில் கோர்ட் தலையிட முடியாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிலம் கையகப்படுத்திய செல்லுபடியாகும் என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.