Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில்….. “பசுமை பாரம்பரிய திட்டம்”…. தொடங்கி வைத்த கலெக்டர்..!!

“மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை ரூ 3.76 கோடி மதிப்பில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் “மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை கடற்கரை கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் மகேஸ்வரி, சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, திட்ட செயலாளர்கள் தபாசிஷ், நியோகி, கல்பனா சங்கர், இஸ்மாயில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பயணிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம்  மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்காக ரூபாய் 3.76 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த தனியார் தொண்டு நிறுவனம் நியமிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பயன்படும் வகையில் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கு பெண்களே இயக்கும் 3 பேட்டரி வாகனங்களை அறிமுகம் செய்துள்ளார். அதன்பின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

Categories

Tech |