Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைத்து பகுதிகளையும் தடை செய்யுங்க…. மாமல்லபுரத்தில் தீவிர ஆய்வு…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களையும், சுற்றுலா தலங்களையும்  மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவர்ணம் தலைமையில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கடற்கரை கோவில் தெற்கு, வடக்கு பக்கம் முழுவதும் நடந்து சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அப்போது தடையை மீறி கடற்கரைக்கு வரும் பொதுமக்களை தடுக்கும் வகையில் அனைத்து பாதையையும் தடுப்புகள் வைத்து அடைக்க வேண்டும் என்றும் மேலும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |