தமிழக சட்டப்பேரவையின் போது மாமல்லபுரத்தில் ரூ.5 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்திருந்தார். அதன்படி மாமல்லபுரத்தில் அருங்காட்சியம் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று துணிநூல் துறை அலுவலகம் அலுவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அருங்காட்சியகம் பாரம்பரிய ஜவுளி ரகங்களை பாதுகாத்து புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வண்ண வண்ண ஜவுளிகளை தயாரிக்க இத்திட்டம் செயல்படுத்த உள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியகத்தில் காஞ்சிபுரம் பனாரஸ் பட்டு மற்றும் சின்னாளபட்டி சுங்கடி சேலை ஆகிய பாரம்பரிய ஜவுளி ரகங்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாமல்லபுரத்தின் நுழைவாயில் 40 அடி உயரத்தில் ஸ்தூபி அமைக்கப்படும். மேலும் இந்த திட்டம் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதற்கு தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கும் உதவியாக இருக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.