மாமல்லபுரம் பிரதான சின்னங்களை சுற்றி பார்க்க முதியோர்களுக்கு பேட்டரி வாகனம் இயக்கப்பட 2020ல் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களான கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, பஞ்ச ரதம் பகுதிகளை முதியோர்கள் மாற்றுதிறனாளிகள் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் வாகனம் இயங்க 2020 தொல்லியல் துறை முடிவு செய்திருக்கிறது.மேலும் சர்வதேச சுற்றுலா “ஐகானிக்” நகரமாக மாமல்லபுரத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி “ரெனால்ட் நிசான்” கார் நிறுவனம் 8 பேர் பயணிக்க கூடிய 20 பேட்டரி வாகனங்களை வழங்க முன்வந்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த திட்ட செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் முதற்கட்டமாக கடற்கரைக் கோவிலில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 பேட்டரி வாகனங்கள் இன்னும் ஓரிரு வாரத்தில் இயக்கப்பட இருக்கிறது. இந்த வாகனங்கள் சூரிய ஒளியால் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம் பேட்டரியால் இயக்க கூடியது. இதனைத் தயாரித்த பெங்களூர் நிறுவனம் தற்போது மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஓட்டி பார்த்து அதற்கான ஓட்டும் பயிற்சியும் வழங்கி வருகிறது.