Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமல்லபுரம் புராதன சின்னங்கள்”…. ஒரே நாளில் 10 ஆயிரம் பேர்…. திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!!!!

இந்தியாவானது சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு மத்தியஅரசு சென்ற 5-ஆம் தேதி முதல் வரும் 15-ம் தேதிவரை 11 தினங்களுக்கு இந்தியா முழுதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் இலவசமாக கண்டு ரசித்தனர்.

இந்த புராதனசின்னங்களை பார்ப்பதற்கு உள் நாட்டு பயணிகளுக்கு ரூபாய்.40, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூபாய்.600 என பார்வையாளர் கட்டணமாக நுழைவு கட்டண மையங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற் பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தனர். நேற்று முன்தினமும் இலவச அனுமதியால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் வருகையானது ஓரளவுக்கு காணப்பட்டது.

Categories

Tech |