Categories
உலக செய்திகள்

மாமா பையனை திருமணம் செய்… “மறுத்த மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை”… அதிர்ச்சி சம்பவம்..!!

திருமணத்திற்கு சம்மதிக்காத மகளை தந்தையே கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பைசலாபாத் நகரில் தந்தை ஒருவர் தனது மகளை அவரது மாமா மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அதனை மறுத்துள்ளார். இதனால் தந்தை மகள் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த அன்று தந்தை மகள் இடையே ஏற்பட்ட தகராறில் மகள் என்றும் பாராமல் கோடாரியால் தந்தை தாக்கியுள்ளார். அச்சமயம் அங்கு இளம்பெண்ணின் தாய் மாமாவும் இருந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவி குழு இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தந்தையை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |