Categories
தேசிய செய்திகள்

மாமா மாமா என்ன விட்டுரு….! கதறிய சிறுமி வாயில் ஆசிட் ஊற்றி…. கத்தியால் தொண்டை கிழிப்பு…. உச்சகட்ட கொடூரம்….!!!!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம்,  வேங்கடபுரம் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி நேற்று முன் தினம் இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் வழி மாமா குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்க முயன்றார்.
அப்போது, அச்சிறுமி தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்குள் ஓடியுள்ளார். சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அங்கு கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரது வாய் மற்றும் முகத்தில் அந்நபர் ஊற்றியுள்ளார்.

தொடர்ந்து சிறுமி வலியால் கத்தத் தொடங்கியதும் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு அந்நபர் அங்கிருந்து தப்பியோடினார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் உடனடியாக சிறுமியை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பியதோடு அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லூர் ஊரகக் காவல் துறையினர் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 511 (பாலியல் வன்கொடுமை முயற்சி) 307 (கொலை முயற்சி) மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |