நடிகை நயன்தாரா அவரது அம்மா ஓமணக்குரியன் பிறந்த நாளை சென்னையில் உள்ள இல்லத்தில் கொண்டாடினார். அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று தற்போது தனது பட வேலைகளில் மிகவும் பிசியாக உள்ளனர்.
நடிகை நயன்தாரா ஜவான் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்த திரைப்படத்திற்கான கதையை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அவரது அம்மா ஓமணக்குரியன் பிறந்தநாளை சென்னையில் உள்ள இல்லத்தில் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது சோசியல் மீடியா பக்கத்தில்” என் இரண்டாவது அம்மாவான மாமியார் ஓமணக்குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு அவர் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.