Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கான்சாபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியுள்ளார். இவர்களது மகள் செல்லக்கனி(23) என்பவருக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முனீஸ்வரன் தனது மனைவியை மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் முனீஸ்வரன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து, விவாகரத்து நோட்டீசை செல்லக்கனிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லக்கனி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்லகனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |