திருவண்ணாமலையில் ரவுடி மாமுல் கேட்டு கடைகள் மற்றும் வாகனங்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேலூர் சாலையில் 50க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றனர். அங்கு உள்ள இறைச்சிக் கடையில் ஒன்று புகுந்த மர்ம நபர்கள் பொருளை வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் கடையின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைக்காரருக்கும் மர்ம நபர்களுக்கும் வாய்த் தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்து சென்றவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா நுழைவு வாயில்வரை ரகளை செய்துள்ளனர்.
சிறு தள்ளுவண்டி, காய்கறி கடைகள், பல கடைகள், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை சரமாரியான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதுடன் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் சிலர் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மர்ம நபர்களின் இந்த அட்டகாசம் செயலால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி வரும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் ரகளையில் ஈடுபட்ட பாபு என்பவரை தேடி வருகின்றனர்.