Categories
மாநில செய்திகள்

மாயமான மயில் சிலை….. 29 பேரிடம் விசாரணை….. நீதிபதி தீர்ப்பு என்ன?….!!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004 ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத் தப்படும் உண்மை கண்டறியும் விசாரணை விரைந்து முடிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு இதுவரை 26 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இன்னும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டி உள்ளது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மயிலின் அலகில் மலர்தான் இருந்தது என ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி அறநிலைத்துறை தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றம் அனுமதித்தால் அலகில் மலருடன் கூடிய மயில் சிலை வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Categories

Tech |