Categories
மாநில செய்திகள்

மாயமான கணவன்…. கொழுந்தன் பாலியல் தொல்லை…. கண்ணீருடன் ஒற்றை ஆளாக போராடும் பெண்….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் மன்னப்பந்தல் தெற்கு வெளி தெருவில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பிரவீனா என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 25 சவுரன் நகை, என்பீல்ட் புல்லட், ரூ.3 லட்சம் செலவில் திருமணம் சீர்வரிசை என்று வெகு விமர்சையாக மாப்பிள்ளைக்கு அளித்து திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு மூன்று மாதம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் பிரவீனாவுக்கு மேலும் வரதட்சனை கேட்டு நெருக்கடி தரப்பட்டது. இந்நிலையில் வெளியூருக்கு வேலை தேடி செல்வதாக சென்ற நடராஜன் பல மாதங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. மாமனார் வீட்டில் வசித்து வந்த பிரவீனாவிற்கு கணவரின் தம்பி பாலியல் தொல்லை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கணவரின் தம்பி மீது பிரவீனா புகார் அளித்தார். அதனை தொடர்ந்து மாமனார் ராஜேந்திரன் மற்றும் மாமியார் வசந்தா ஆகியோர் பிரவீனாவை வீட்டை விட்டு வெளியேற்றினார்.

கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவருடன் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத சூழலில் உறவினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் உதவியுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த பிரவீனாவின் மாமனார் விவாகரத்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கணவரை கண்டுபிடித்து கொடுக்க வலியுறுத்தியும் கணவருடன் சேர்ந்து வாழ கோரியும் பிரவீனா மாமனார் வீட்டு திண்ணையில் கடந்த சில தினங்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மாமனார் குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். அப்போது திறந்த கிராம பொது மக்கள் மற்றும் மகளிர் குழுவினர் ஆதரவுடன் கடப்பாரையால் பூட்டை உடைத்து மாமனார் வீட்டில் குடியேறினார். தன்னை கணவருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கணவர் எங்கிருக்கிறார் என்பதை மாமனார் வீட்டினர் தெரிவிக்க வேண்டும் என்றும் அதுவரை ஒற்றைய ஆளாக போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |