இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் மாயமானதில் அதிலிருந்த 53 வீரர்கள் உயிர் பிழைக்க முடியாமல் போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் சுமார் 53 வீரர்களுடன் பாலி கடற்பகுதியில் மாயமானது. அந்த கப்பல் மூன்றாகப் பிளந்து, பயணம் செய்த அனைத்து வீரர்களும் உயிரிழந்ததாக கடற்படை தெரிவித்துவிட்டது. ஆனால் ஆபத்தான நிலையில் அந்த கப்பலிலிலிருந்து வீரர்களால் தப்ப முடியாமல் போனது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது இந்த கப்பல் ஜெர்மன் தயாரிப்பாகும். எனவே இதில் ஆபத்து சமயங்களில் வீரர்கள் தப்பிக்க எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கப்பலுக்குள் தண்ணீர் போகாமல் இருப்பதற்காக சிறப்பு கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மனிதர்களால் அந்த கதவுகளை திறக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த கப்பல் சுமார் (800 மீட்டர் ஆழத்தில்) அதாவது ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மாகாணத்தில் இருக்கும் பர்ஜ் காலிபா என்ற கட்டடத்தினுடைய உயரத்திற்கு சமமான ஆழத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆழத்திலிருந்து யாராலும் தப்பித்து நீரின் மேல் மட்டத்திற்கு வர இயலாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது 700 மீட்டருக்கும் மேல் கடலின் ஆழத்தில் ஒருவர் மாட்டிக் கொண்டால், அவரை சுமார் 100 யானைகள் மிதிப்பது போல நீரின் அழுத்தம் இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த காரணங்களால்தான் அந்த கப்பலில் இருந்து எவரும் தப்பித்து வர முடியாமல் போனதாக தெரியவந்திருக்கிறது.