Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாயமான நகைப்பை…. தேடி அலைந்த உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

திடீரென மாயமான 31 பவுன் தங்க நகை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆயப்பாடி மெயின் ரோடு பகுதியில் அப்துல் குத்தூஸ் தனது மனைவியான மெகராஜ்கனியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விட்டு தனது கணவருடன் சொந்த ஊரான நீடூருக்கு திரும்பியுள்ள தனது மகளை பார்த்துவிட்டு, நகைகளையும் கொடுத்து விட்டு வருவதற்காக ஆயப்பாடியிலிருந்து மெகராஜ்கனி மயிலாடுதுறைக்கு பேருந்தில் வந்துள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கிய மெகராஜ்கனி ஒரு கடையில் இனிப்பு வாங்குவதற்காக சென்றுவிட்டு, தான் கொண்டு வந்த 31 பவுன் நகைப்பையை அங்கேயே மறந்து வைத்துவிட்டு மூன்று சக்கர வாகனத்தில் நீடூருக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து நகைப்பையை மறந்து வைத்துவிட்டு வந்ததை அறிந்த மெகராஜ்கனி அங்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அந்த இடத்தில் நகைப்பை இல்லை. இதுகுறித்து மெகராஜ்கனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரின் பேரில்ன் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேக்கரி கடை ஊழியர், மூன்று சக்கர வாகன ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |