Categories
உலக செய்திகள்

மாயமான விமான படை வீரர்…. தாய்க்கு வந்த தொலைபேசி அழைப்பு…. பின் தெரிந்த கொடூர உண்மை….!!

மாயமான விமானப்படை வீரரின் சடலம் குப்பை தொட்டியில் தள்ளப்பட்டதாக அவரின் தாய்க்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் விமானப் படை வீரரான Corrie Mckeague(23) கடந்த 2014ஆம் வருடம் நம்பர் 24 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து அவரை எங்கு தேடியும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாயமான அந்த வாலிபரின் தயார் தனக்கு சில நபர்களிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் வாலிபர் ஒருவர் மது போதையில் இருந்தபோது அவரிடமிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

பின்னர் அவர் குப்பைத்தொட்டியில் தள்ளப்பட்டார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்த தகவலை தகவலை யாரிடமும் கூறக் கூடாது என்று காவல்துறையினர் என்னிடம் கேட்டுக் கொண்டதால் தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு சம்பந்தமாக வெள்ளிக்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையில் அதிகாரிகள் வாலிபர் மாயமானது சம்பந்தமாக ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் சம்பவத்தன்று நள்ளிரவு Corrie குப்பைத்தொட்டியில் தள்ளப்பட்டுள்ளார். அதன்பின் லாரி மூலமாக குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு போது வழியில் அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாகவும், மது அருந்தி இருந்ததாலும் மரணமடைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னால் காவல்துறையினர் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக 2017 மரணம் மில்டன் பகுதியில் அமைந்துள்ள 120 ஏக்கர் குப்பைக்கிடங்கில் சுமார் 27 வாரங்கள் செலவிட்டு தேடி வந்துள்ளனர். ஆனாலும் Corrie சடலத்தை அதிகாரிகளால் கண்டெடுக்க முடியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |